ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, நாளையதினம் பல்வேறு கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின், கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இதற்கான நிகழ்வு, நாளை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மவ்பிம மக்கள் கட்சி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, ஏறாவூர் ஜனநாயகக் கட்சி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, லிபரல் கட்சி, புதிய சிஹல உறுமய, ஜனநாயக தேசிய இயக்கம், பூமிபுத்திர கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபை உள்ளிட்ட கட்சிகளுடன் நாளைய தினம் சுபவேளையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. (சி)