தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையை அடுத்து நாட்டின் பல இடங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக இடையிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதோடு அதனால் தாழ்வான இடங்களில் நீர் தேங்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது இதனால் நுளம்புகளின் பெருக்கமும் அதிகரிப்பதோடு நோய் பரவும் என்றும் அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ,கண்டி, காலி ,மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு அதிகம் பரவியுள்ளதக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாடசாலை ,வீடு, வேலைத்தளம் ,கட்டிட நிர்மாணத்துறை பகுதிகள் ,நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் டெங்கு நுளம்பு அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதோடு இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு டெங்கு நுளம்புகள் உள்ள சூழல் பகுதிகளை சுத்தம் செய்வது கட்டாயம் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.(சே)

Previous articleபயங்கரவாதத்தின் கோரமுகத்தை கொழும்பில் பார்த்தேன் : மோடி
Next articleதமிழ் மக்களுக்கு உதவி செய்ய மோடி தயார் : செல்வம்