நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையால், மொனராகல மாவட்டத்திலுள்ள இங்கினியாகல சேனநாயக்க  சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இதனால் சேனநாயக்க சமுத்திரத்தில் பெருமளவு நீர்வற்றிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 7 இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் அடி நீர் கொள்ளளவை சேனநாயக்க சமுத்திரம் கொண்டுள்ளது. ஆனால் அந்நீர் மட்டம் இன்று வெறும் 36 ஆயிரம் ஏக்கர் அடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் குறைந்தளவு வெளாமை செய்கை மற்றும் நன்நீர் மீன்வளர்ப்புக்களையே மேற்கொள்ள முடியும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். (மு)

Previous articleகளுத்துறை கடற்பரப்பில் நீராட சென்ற மாணவன் காணாமல் போயுள்ளான்.
Next articleஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 26 கோடி 50 இலட்சம் ரூபா இழப்பீடு.