எந்த வகையிலும் தீவிரவாதம் மீண்டும் நாட்டில் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் , இன்று விசேட அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளார்.

முஸ்லீம் அமைச்சர்கள் இராஜினாமா காரணமாக, மக்களின் கவனம் பல விடயங்களில் இருந்து திசை திரும்பியுள்ளது, பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன, மத்திய வங்கி மோசடி மறக்கப்பட்டுள்ளது, கடன் நெருக்கடி மறக்கப்பட்டுள்ளது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த சிலர் இன்னமும் மருத்துவமனையில் உள்ளனர், அவர்களும் மறக்கப்பட்டுவிட்டனர்.
தீவிரவாதிகள் குறித்து தற்போது எவரும் பேசுவதில்லை, தேடுதல் நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டன, ஆயுதங்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் முடிவடைந்து விட்டன.

கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து எவரும் பேசுவதில்லை.

அரசாங்கம் ஒரே கல்லில் நூற்றுக்கணக்கான பறவைகளை கொலை செய்துள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக, முஸ்லீம் சமூகத்தை ஐக்கிய தேசிய கட்சி சிறந்த முறையில் பயன்படுத்துகின்றது.

முஸ்லீம் சமூகத்தில் உள்ள மிதவாதிகளினதும் தீவிரவாத போக்குடையவர்களினதும் வாக்குகள், ஐக்கிய தேசிய கட்சிக்கு அவசியம்.

ஐக்கிய தேசிய கட்சி தனக்கான வாக்கு எங்கிருந்து கிடைக்கின்றது என சிந்திப்பதில்லை.

தாங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடிய அரசாங்கத்தையே முஸ்லீம் தலைவர்கள் விரும்புகின்றார்கள். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Previous articleசஹாரானுடன் பிரபல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்புண்டு : அசாத் சாலி
Next articleஊடகவியலாளர் தவசீலன் இன்று விசாரணை செய்யப்பட்டார்!