ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், தற்போதும் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை, கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர், அங்கு மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் உயிருடன் இருப்பார்களானால், அவர்கள் அனைவரும் பொலிஸாரின் கூண்டுகளில்தான் இருக்கிறார்கள்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 200 சந்தேக நபர்கள் விளக்கமறியலிலும் தடுப்புக் காவலிலும் இருக்கின்றார்கள்.
இவ்வாறு கைதுகள் இடம்பெற்றிருக்கின்ற என்பதுடன், இதனை நாங்கள் கைவிடப்போவதில்லை.
விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
கண்டி பகுதிக்கு விசேட அவதானத்தை நாங்கள் செலுத்தியுள்ளோம். எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது
பிராதன பெரஹரா மற்றும் வடக்கு, தெற்கு பகுதிகளில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இடம்பெறுகின்ற திருவிழாக்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் நிடைபெறுகின்ற ஆராதனை விசேட நிகழ்வுகள் என்பன இந்த ஓகஸ்ட் மாதத்தில் அதிகமாக ஏற்பாடுகளாகின்றன.
ஆகவே எமது பாதுகாப்பு விடயத்தில் உச்சகட்ட நடவடிக்கையை தற்போதும் ஈடுபடுத்தியிருக்கின்றோம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)