நாட்டில் நிரந்த அமைதியும் சமாதானமும் இன ஐக்கியமும் ஏற்பட வேண்டுமென வேண்டி விஷேட மட்டக்களப்பு காத்தான்குடியில் துஆப்பிராத்தனை நிகழ்வொன்று இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபை காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில இந்த விஷேட துஆப்பிராத்தனை நிகழ்வு நடைபெற்றது.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் இடம்பெற்ற பிராத்தனை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் முன்னாள் காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி துஆப்பிராத்தனையை நடாத்தினார்.

இந்த வைபவத்தில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் உலமாக்கள் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நாட்டில் நெருக்கடி நிலைகள் நீங்கி நிரந்த அமைதியும் சமாதானமும் இன ஐக்கியமும் ஏற்பட வேண்டுமென பிராத்தனை நடாத்தப்பட்டதுடன் விஷேட நோன்பு துறக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

Previous articleஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ஹக்கீம் பதிலளிக்க வேண்டும்
Next articleதெரிவுக்குழு சபாநாயகரை சந்திக்கின்றது!