நாட்டின் பெரும்பாலான கடற் பிராந்தியங்களில் காற்று பல்வேறு திசைகளிலிருந்தும் பலமாக வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு பிரதேசத்திலும் நாட்டின் வட மேற்கு, மேற்கு, தென் மேற்கு மற்றும் தெற்கு திசையிலான கடல் பிரதேசங்களில் நிலவும் காற்றின் வேகத்தை இன்றும் எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு தெற்கு, மத்தி, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி 60-70 கிலோ மீற்றர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் அடிக்கடி 40-50 கிலோ மீற்றர் வரைக்கும் காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இவ்வறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மேல் மாகாணத்திலும் கொழும்பு, ஹம்பகா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ஒரளவுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது இந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்றும் வீசக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இடி மின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. (நி)







