இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சளார் லசித் மலிங்க நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உலக கிண்ண போட்டிகளில் விளையாடிவரும் நிலையில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது மனைவியின் தாயாரது இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே லசித் மலிங்க நாடு திரும்பவுள்ளதாக இலங்கை அணியின் முகாமையாளர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பும் லிசித் மலிங்க, தனது மனைவியின் தாயாரது இறுதிக்கிரிகைகளில் பங்குகொண்ட பின்னர் மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






