நாடளாவிய ரீதியில் 16 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அனைத்து தபால் நிலையங்களும் இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாதமையினால் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிறுநீரக கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு போன்ற பல்வேறு தேவைகளின் பொருட்டு, தபால் நிலையத்திற்கு சென்ற தந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு கிடைக்காவிடின், பாரிய தொழில் சங்க நடவடிக்கைக்கு தயாராவோம் என வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleவவுனியாவில் விபத்து: மதகுரு படுகாயம்!
Next articleமலையகத்திலும் தபால் சேவைகள் பாதிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here