நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பில் உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு ஆலய தர்மகர்த்தாவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா ஒகஸ்ட் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

அத்துடன், 26ஆவது நாள் திருக்கல்யாண உற்சவமும் 27ஆம் நாள் வைரவர் உற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)

Previous articleமேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை !
Next articleசடலத்தை தேடி தொடர் நடவடிக்கை