ஏப்பில் 21ம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினை அடுத்து இனங்களுக்கு இடையில் சீர்குலைந்துள்ள நல்லிணகத்தினை எதிர்காலத்தில் மீளக்கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு கூட்டம் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
விசேட குழுவின் தலைவர் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க எதிர்கட்சித் தலைவர் மகிந்தராஜபக்ச உட்பட பாராளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்;.
கலந்துரையாடல்களில் பல்வேறு நன்மை தரும் விடயங்கள் பேசப்பட்டிருப்பதாக தெரிவித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்காலத்திலும் தொடர்;ச்சியாக கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். (மு)