இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி மலையகத்தில் இன்று மலரவுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று முற்பகல் சுபநேரத்தில் கொட்டகலை சி.எல்.எப். கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது.
கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னர் ஊடகவியலாளர் மாநாடும் நடத்தப்படவுள்ளது.
” முக்கிய சில அரசியல் பிரமுகர்கள் புதிய கூட்டணியில் இணைவார்கள். குறிப்பாக இ.தொ.காவிலிருந்து வெளியேறிய சிலர் மீண்டும் தாய்வீடு திரும்பவுள்ளனர். மேலும் இன்று அதிரடி மாற்றங்கள் இடம்பெறும்
புதிய அரசியல் கூட்டணியை இலக்குவைத்தே அண்மையில் 30 கோரிக்கைகள் அடங்கிய விசேட அறிக்கையை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டது என கூறப்படுகின்றது.
அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய கூட்டணி அமையும் என்றும், கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மாத்தளை,மொனறாகலை மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களிலும் அரசியல் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்படவுள்ளன என்றும் அந்த பிரமுகர் சுட்டிக்காட்டினார்.(சே)