விஞ்ஞான தொழில்நுட்ப அறிவை வளர்த்து, எதிர்கால சந்ததியினரை புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்லவேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலகம் இன்று விஞ்ஞானத்தினால் வளர்ச்சி அடைந்துள்ளது, அமெரிக்கா, நவீன தொழில்நுட்பங்கள் ஊடாக கிடைக்கும் வருமானங்களை கொண்டே பொருளாதாரத்தினை உயர்வடைய செய்கின்றது, உதாரணத்திற்கு கூகிள் ஊடாக கிடைக்கும் இலாபம், நாட்டை முன்னேற்றுவதற்கு போதுமானது, வேறு ஒன்றும் தேவையல்ல.

விஞ்ஞான தொழில்நுட்பம் இல்லாது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

முன்னைய காலத்தில் இலங்கையில் இருந்த பொறியிலாளர்கள் அறிவு போன்று யாருக்கும் இருக்கவில்லை
அவ்வாறு இருந்ததன் காரணமாகத்தான் தலாவவௌ குளம், மின்னேரியா குளம் போன்ற பெரிய குளங்களைஅமைத்ததார்கள் சிகிரியாவை உருவாக்கினார்கள், கப்பல்கள் தொடர்பில் அறிவு இருந்தது.

எனவே எதிர்கால சந்ததியினரை புதிய உலகிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், விஞ்ஞான தொழில்நுட்ப அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தேசிய பாடசாலையின் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், லப்டொப் ரப் ரக கணனிகளை வழங்கவுள்ளோம் பயிற்சிக்காக ஆசிரியர்களை நியமிக்கவுள்ளோம், அனைவரும் எதிர்காலத்தில் கணினி ஊடாக கல்வியை தொடர்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும்.

விஞ்ஞான தொழில்நுட்பத்தினை வளர்ப்பதன் ஊடாக, நாட்டின் பொருளாதாரத்தினை வளர்சியடைச் செய்ய வேண்டும்.

இதனை மலிக் சமரவிக்கிர அமைச்சர் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்கின்றார், சுற்றுலாத்துறை மற்றும் கல்வி அனைத்தினையும் வளர்சியடையச் செய்வதற்கும், தற்போதைய காலகட்டத்தில் விஞ்ஞான தொழில்நுட்பம் அவசியமானது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Previous articleஜமாத்தி இஸ்லாம் அமைப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பு : முஸம்மில்
Next articleவவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் தீ விபத்து