மட்டக்களப்பு கிரான் தொப்பிகல காட்டுப்பிரதேசத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக, பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் குறித்த யானையானது தொப்பிகல குள பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் நடமாடித் திரிந்ததாகவும் தற்போது இறந்த நிலையில் காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு வருகைதந்த பிரதேசத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அதனை அவ்விடத்தில் இருந்து அகற்றுவத்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பிரதேசத்தில் யானையின் தொல்லை காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் பிரதேசத்தில் உள்ள நெற்பயிர்கள் சிறுதோட்டப் பயிர்கள் போன்றவற்றை தமது உணவாக உட்கொண்டு வருவதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பிரதேச வீதிகளில் செல்வதற்க்கும் அச்சமடைந்த நிலையில் காணப்படுவதுடன் குறித்த பிரதேசத்தில் ஒரேநாளில் இருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)

Previous articleமட்டக்களப்பில் மக்ககுக்கான குடி நீர் வழங்கிவைப்பு
Next articleகிளிநொச்சி தொண்டமான் நகர் வீதி புனரமைப்பு