தொடருந்து பணியாளர்கள் ஆரம்பித்திருந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.

தொடருந்து சாரதிகள் கட்டுப்பாட்டாளர்கள் தொடருந்து நிலைய அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரங்களைச் சார்ந்த பணியாளர்கள் ஆரம்பித்திருந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் தொடருந்து சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து வழிநடத்தல் பணியாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் டுபடுவதா இல்லையா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் லால் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தொழிற்சங்கங்கள் எல்லை மீறி செயற்பட்டால் எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

அரசியல் பின்னணியின் அடிப்படையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுவதாகவும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக உள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். (நி)

Previous articleமெக்சிக்கோ எல்லையில் தந்தையும் மகளும் பலி : விமர்சனங்கள் முன்வைப்பு
Next articleதங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது!