தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையான வாகன பேரணி இன்று காலை மன்னாரில் ஆரம்பமானது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பட்டில் மன்னார் மாந்தை சந்தியில் இருந்து குறித்த வாகன பேரணி ஆரம்பமானது.

மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திணைக்கள பணியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள், குறித்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரை ஆரம்பமான வாகன பவனியில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாடு தழுவிய ரீதியில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் கடந்த 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி வரை அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிர்ப்பணர்வு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleபோதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!
Next articleபோதைப்பொருள் ஒழிப்பிற்கான வானப்பேரணி!