தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழு ஒன்றை அமைக்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையிலான, இந்த தொழில்சார் ஆலோசனைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான காலிங்க இந்ரதிஸ்ஸ, நைஜல் ஹெச், சட்டத்தரணி ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் உள்ளனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழு, முதன் முறையாக, இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கூடியது.
தமது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சுயாதீனமாக முன்வைத்து, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்துவதற்கு, இந்த ஆலோசனைக் குழு அதிகளவிலான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இதேவேளை, தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று நண்பகல் ஜனாதிபதி இங்கிலாந்திற்கு பயணமானார். (சி)






