தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் மீது இதுவரையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்குவதில் எவ்வித எதிர்ப்பும் இல்வை என சட்டமா அதிபர் வழங்கிய கடித்ததின் அடிப்படையில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் குறித்த நபரை விடுதலை செய்யவும் அவருக்கு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு 24 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளுடன் குறித்த நபர் வாழைத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(சே)

Previous articleடோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு
Next articleநேபாளத்தில் கடும்மழை:உயிரிழப்பு 65 ஆக உயர்வு