உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் படி ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
பாரளுமன்ற விசேட தெரிவிக்குழுவில் உள்ள அங்கத்தவர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில்தான் ஜனாதிபதி அழைக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தெரிவுக்குழுவில் விசாரணைக்கு அழைப்பதற்காக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவார்தன , முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன
எவ்வாறு இருப்பினும் எந்த திகதியில் இவர்கள் அனைவரையும் சாட்சியம் வழங்க அழைக்கப்படும் என்பது தொடர்பில் முடிவாக வில்லை என்றும் தகவல் வழங்கியவர் தெரிவித்தார் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது .(சே)








