ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கத் தயார் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நான் அழைக்கப்பட்டுள்ளேன்.
தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி, எனக்கு தெரிந்த விடயங்களை தெரிவிப்பேன், ஆகவே, தெரிவுக்குழு ஊடாக நாம் உண்மையை கண்டறிந்து கொள்வோம்.
மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, கூடுதலான வாக்குகளினால் வெற்றி பெற்றது, பாராளுமன்றத்தில், குற்றம் எல்லாம் பொய் என நீரூபிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு தலைவர்களை சந்தித்து, என்ன என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன், அதன் பின்னர் தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்றன, கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. என குறிப்பிட்டுள்ளார். (சி)








