நுவரெலியா நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கெட்டபுள்ளா தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில், நிலம் தாழிறங்கிய காரணத்தினால், 5 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை, குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் நிலம் தாழ் இறங்குவதை அவதானித்த பிரதேச மக்கள், நாவலபிட்டி பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கிராம உத்தியோகத்தரின் ஊடாக, கொத்மலை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, 5 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக, கொத்மலை பிரதேச செயலாளர் சுரங்கி பெரேரா தெரிவித்தார்.
இந்த நிலையில், வெளியேற்றப்பட்ட மக்கள், தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று பாதிக்கப்பட்ட மக்கள், கொத்மலை ஒயா அமைக்கப்பட்ட காலப்பகுதியில் வெளியேற்றப்பட்டு, தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டதாக, மக்கள் குறிப்பிட்டுள்ளனர். (சி)