தென்மராட்சி எழுதுமட்டுவாழ் ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் இன்று பிற்பகல் ரயிலில் மோதுண்டு குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்
ரயில் கடவை இல்லாத பகுதியூடாக எதிரேயுள்ள ஆலயத்திற்கு செல்வதற்காக ரயில்ப் பாதையினை கடக்க முற்பட்ட போது ரயில் பெண் மீது மோதியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் மோதுண்டு உயரிழந்தவர் எழுதுமட்டுவாழ் கரம்பகம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி வயது 50 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.