முல்லைத்தீவு சாலைப் பகுதியில் தங்கியிருந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் மருதங்கேணி, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற பகுதிகளில், கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மீனவர்களால், தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சிறுதொழில் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
7 கடல் கிலோ மீட்டர் தொலைவில், ஆழ் கடலில் அட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட வேண்டிய, அட்டை தொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள், கரையோரமாக சுண்டிக்குளம், கேவில் கட்டைக்காடு, உடுத்துறை, நாகர்கோவில் ஊடாக, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற பகுதிகளில் கடல் அட்டை பிடிப்பதனால், கரையில் உள்ள கரைவலை மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளில் தொழில் செய்யும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக, மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில், பிரதேச செயலாளர் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் உட்பட பலருக்கும், பல தடவைகள் அறிவிக்கப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, மீனவர்கள் தெரிவித்தனர். (சி)





