திருகோணமலை கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட, காக்காமுனை மேல்திடல் வீதி, மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில், அதனை புனரமைப்பதற்கான பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் கே.நிகார் தலைமையில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், பிரதம அதிதியாக கலந்துகொண்டு, வீதியை காப்பட் வீதியாக மாற்றுவதற்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.
ரண் மாவத் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின், ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா நிதி ஓதுக்கிட்டில், காக்காமுனை மேல்திடல் வீதி, காப்பட் வீதியாக 850 மிற்றர் தூரம் அமைக்கப்படவுள்ளது.
காக்கமுனை மக்கள், மேல்திடல் பிரதான வீதியை, பிரதான வீதியாக பயன்படுத்தி வருகின்றனர்.
சுமார் 3 வருடங்களாக, வீதி மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினருக்க தெரியப்படுத்தியை அடுத்து, அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். (சி)