திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள எஸ்.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி புதிய பிரதேச செயலாளராக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள த.கஜேந்திரன் ஆகியோர் திருக்கோவில் பிரதேச மக்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச தவிசாளர் இ.வி.கமலராஜன் தலைமையில் திருக்கோவில் பிரதேச சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தக சங்கம் மற்றும் கட்டட ஒப்பந்தகாரர்கள் ஆகியோரின் எற்பாட்டில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இடமாற்றும் பெற்றுச் சென்றுள்ள திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் பிரதேச மக்களுக்காக கடந்த ஆறுவருட காலத்தில் முன்னெடுத்திருந்த பாரிய அபிவிருத்தி பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கான பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் திருக்கோவில் குமரவித்தியாலய பாடசாலையின் முன்பாக இருந்து மலர்மாலைகள் அணிவித்து பாண்ட் வாத்தியத்துடன் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு அங்கு கவிஞர் தம்பிலுவில் எஸ்பி.நாதனால் வாழ்த்துப் பா வாசிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தவிசாளர் இ.வி.கமலராஜன், திருக்கோவில், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக பிரதேச செயலாளர்களான ரி.கஜேந்திரன்,ரி.அதிசயராஜ், சட்டத்தரணி கே.ஜெகசுதன், ஆலய நிர்வாகிகள், விளையாட்டு கழகங்கள், ஊடகவியாளர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து பொது அமைப்புக்களும் என சுமார் 20க்கும் மேற்பட்ட பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளால் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களின் ஆறுவருட கால சேவை தொடர்பாக சிறப்புரைகளும் இடம்பெற்றன.

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் முதலாவது உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய அமரர் எஸ்.வி.ஆர். வேதநாயகம் அவர்களின் சேவைக்கு பிரதேச மக்கள் வழங்கிய மாபெரும் கௌரவிப்புக்கு பின்பு 29 வருடங்களுக்கு பின்னர் ஒரு பிரதேச செயலாளருக்கு பிரதேச மக்கள் வழங்கி இரண்டாவது பிரமாண்டமான கௌரவிப்பு விழா பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களுக்கே ஆகும்.

இதேவேளை இந்நிகழ்வில் புதிதாக திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பெற்றுள்ள ரி.கஜேந்திரனையும்; திருக்கோவில் பிரதேச மக்கள் பொன்னாடைகள் பேர்த்தி வரவேற்றனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள், வலயக்கல்வி அலுவலக கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்பின் நிருவாகிகள், பொது மக்கள் என பெருமெண்ணிக்கையானோர் கலந்து கொண்டு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனை பாராட்டி கௌரவித்தனர். (நி)

Previous articleஅரசியல் உரிமையுடன் அபிவிருத்தி உரிமைகளையும் நாம் பெறவேண்டும்:மனோ(காணொளி இணைப்பு)
Next articleபிரதமர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்!