அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினருக்கு சுமார் நான்கு இலட்சம் பெருமதியான விளையாட்டு உபகரணங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்று இருந்தன

இவ் விளையாட்டு உபகரணங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக, நிதி ஓதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களினால் கதிரவன் விளையாட்டுக் கழக நிருவாக உறுப்பினர்களிடம் கையளித்துள்ளனர்.

இதேவேளை திருக்கோவில் கதிரவன் விளையாட்டு கழகம் மற்றும் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழகங்களுக்கான கழக சீருடைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வழங்கி வைத்திருந்தார்.

நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேசசபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் டி.மோகனகுமார், கணக்காளர் எம்.அரசரெத்தினம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டி.சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்திருந்தனர்.

Previous articleதெரிவுக்குழு அமர்வு : நேரடி ஒளிபரப்புக்குத் தடை
Next articleவிபத்தில் இரு இளைஞர்கள் பலி