அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட தங்கையா கஜேந்திரன் இன்று தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவருக்கான பிரதேச செயலாளர் நியமனத்தை பொதுச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய பொது நிர்வாக அமைச்சு வழங்கியது.
இதற்கமைவாக இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களின் வரவேற்புக்கு மத்தியில் தனது கடமையினை ஆரம்பித்தார்.
திருக்கோவிலில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன், கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்;.திரவியராஜ் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றசான் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உள்ளிட்ட ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்வின் பின்னர் பிரதேச செயலாளர் தனது தாய் தந்தை மற்றும் சிரேஸ்ட பிரதேச செயலாளர்களின் ஆசியினை பெற்றுக்கொண்டார். பின்னர் சுபவேளையில் வரவு பதிவேட்டில் கையொப்பமிட்டதுடன் முன்னாள் பிரதேச செயலாளரிடம் இருந்து ஆவணங்களை பொறுப்பேற்றுக் கொண்டார். இதேவேளை திருக்கோவில் பிரதேச செயலாளராக பல வருடங்கள் சிறந்த சேவையாற்றிய எஸ்.ஜெகராஜன் காரைதீவு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.(சி)








