அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மண்டானை பிரதேசத்தில் காணப்படும் குப்பைகிடங்கானது பிரதேச கழிவுகளை சேகரிக்கும் இடமாக காணப்படுகின்றது.
இது தெடர்பில் கவனம் செலுத்திய எமது டான் ரீவியானது இது தெடர்பில் மேற் கொண்டு அலசியபோது குறித்த கழிவு அகற்றும் கிடங்கானது தற்போது நிரம்பிக் காணப்படுவதுடன் குப்பைகள் கிடங்கின் மேற்பாகத்தில் கொட்டப்பட்டிருப்பதனை காணமுடிந்தது.
இதில் சேதனைப்பசளை செய்யும் நிலையமும் காணப்படுகின்றபோதிலும் சேதனப்பசளை செய்வதற்காக கழிவுகளை தரம்பிரிப்பதில் பிரதேச சபை பாரிய சவால்களை எதிர் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக டான் ரீவிக்கு விளக்கமளித்த பிரதேச சபை தவிசாளர் ஆர்.டபிள்யூ.கமலராஜன் பிரதேசத்தின் கழிவூகளை உரியமுறையில் அகற்ற மக்கள் பிரதேச சபைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.