அம்பாறை திருக்கோவில் குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் மென்பந்து சுற்றுப் போட்டிகள் வைபவ ரீதியாக இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான சு.கார்த்திகேசு தலைமையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 30 கழகங்கள் பங்கு கொண்டுள்ளதுடன், சுற்றுப் போட்டிகளானது ஜந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு ஏழு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளாக இடம்பெறுவதுடன், எதிர்வரும் மாதம் இறுதிச் சுற்றுக்கள் இடம்பெற்று பரிசளிப்பு வைபவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஎஹலியகொட ஆதார வைத்தியசாலை மக்களிடம் கையளிப்பு
Next articleயாழில் பொலித்தீன் பாவனைக்கு தடை