கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மறை மாவட்ட ஆயரை சந்தித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிரிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகையை, சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு, திருவண்ணாமலை ஐவர் மலையில் உள்ள ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது, கல்வி பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்த ஆயர், உரிய தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளார். (நி)








