பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத செயலுடன் தொடர்பில்லாவிட்டால் அவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு இல்லாவிட்டால் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.(சே)









