மலையக இளைஞர்கள் தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு உரிமையுண்டு என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் காணப்படும், தரிசு நிலங்களை மலையக இளைஞர்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நடைமுறையினை தடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் தரிசு நிலங்களை பாவனைக்கு உட்படுத்தி இளைஞர்களின் வாழ்வதாரத்தை உயர்த்தும் செயற்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். (நி)








