செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இரண்டு எரிவாயு நிறுவனங்கள், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர், தர நிர்ணய பணியகம் உள்பட 10 பேர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்குவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், உரிய குற்றவியல் விசாரணையை நடத்த பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
எரிவாயு விபத்தில் சேதமடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய எரிவாயு கையிருப்பு உள்ள சிலிண்டர்களை சந்தையில் இருந்து அகற்றுமாறும் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று பரிசீலனைக்கு வருகிறது.
தரமற்ற சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல்!
