பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில், மலையகத்திற்கான தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள தபால் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன.
தபால் உழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, தபால் நிலையத்திற்குச் சென்று நாளாந்தம் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் மக்கள் பல்வேறு அசௌசரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். (மு)









