நுவரெலியா மாவட்டம் ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் கிளங்கன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாமிமலை ஒல்டனிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் ஹட்டனிலிருந்து நோர்வூட் சென்ற முச்சக்கரவண்டியும் மோதுண்டே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த அவரது தாயாரும் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் அதிக வேகமே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்தும், முச்சக்கரவண்டியும் மோதி விபத்து!
