ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று தஜிகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிஷ்சேக்கில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இடம்பெற்று வருகின்றது.

இதில் பங்கேற்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமலி ரஹ்மான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, இன்று துஷான்பே ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5 ஆவது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேற்று தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாடு, ஆசியாவில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு அவசியமான ஆசியாவின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கும் நோக்குடன், 1992 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட பல்-தேசிய மாநாடாகும்.
இந்த நிலையில், இன்று ஆரம்பமான மாநாட்டில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாளை இடம்பெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார். (சி)

Previous articleபா.உ அத்துரலிய தேரர் மற்றும் டிலான், டான் ரீவி தலைமையகத்திற்கு விஜயம் : டான் ரீவி குழுமத் தலைவருடன் சந்திப்பு
Next articleஹிஸ்புல்லா மூன்றரை மணிநேர வாக்குமூலம்!