டெங்கு ஒழிப்பு தொடர்பில் தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நவம்பர் மாத இறுதிவரை, நாட்டில் 25 ஆயிரத்து 910 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிரந்தரமாக முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு நிறுவனத்திலும் அர்ப்பணிப்புள்ள அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை!






