அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிற நாடுகளிலிருந்து மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கும் டிரம்ப் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள நாடுகளின் குடியுரிமை இல்லாத பிற நாட்டவர்கள், மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் நுழைந்தால் அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் முதல் அமுலுக்கு வந்த இந்த உத்தரவை எதிர்த்து, சான் ஃபிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுவை விசாரித்த நீதிபதி ஜான் டைகர், டிரம்ப்பின் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார். (நி)