ஜேர்மன் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜான் ரோட், கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளார்.

தனது விஜயத்தின்போது, தற்போது ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் நிலைமைகள் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அவர் கேட்டறிந்து கொண்டார்.
ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கான உதவிகள் ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்தும், இலங்கை அரசிடமிருந்தும் கிடைத்து வந்தன.

இந்நிலையில் இலங்கை அரசின் உதவியும் கிடைக்காத நிலையில் தொழில்நுட்பக் கல்லூரியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடலின் பின்னர் ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியை பார்வையிட்ட பின்னர் உயர்ஸ்தானிகர் ஜான் ரோட் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொது இலங்கையில் உள்ள இரத்மலானை, மொறட்டுவை ஆகிய தொழில்நுட்பக் கல்லூரிகளும் இதேபோன்ற தரத்தில் இயங்கிக்கொண்டிருப்பதாக கூறினார். (நி)

Previous articleகாட்டுப்பகுதியில் துப்புரவு பணி : 2 சந்தேக நபர்கள் கைது
Next articleபுகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பு!