இறைபதமடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் உடல், மாங்குளம் புனித அக்கினேஸ் ஆலயத்தில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தால் மக்கள் காவுகொள்ளப்பட்ட வேளையிலும் இறுதி யுத்த காலப்பகுதியிலும் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வந்தவர்.
அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அனைவரும் மாங்குளத்தில் ஒன்று கூடி அருட்தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முல்லைத்தீவு மறைக்கோட்ட குருமுதல்வர் அன்டன் ஜோஜ் மற்றும் மாங்குளம் பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளார் உள்ளிட்ட பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் மக்கள் என பலரும் கூடியிருந்தனர்.
மாங்குளம் புனித அக்கினேஸ் ஆலயத்தில் ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் உடலம் வைக்கப்பட்டு வழிபாடு இடம்பெற்று, உடலம் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்படவுள்ளது.
அருட்தந்தைஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி) 





