தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார்.
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 5வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே மூன்று நாட்கள் பயணமாக கடந்த 13ஆம் திகதி தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் மாநாட்டில் உரையாற்றியிருந்ததுடன் மாநாட்டில் கலந்துகொண்ட அரச தலைவர்கள் சிலரையும் சந்தித்திருந்தார்.(நி)