ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபை தேர்தலை நடத்தும் அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி, சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இதன்போதே மாகாணசபை தேர்தலை முதலில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று அல்லது நாளை வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
ஏழு மாகாணசபைகளின் காலம் முடிவடைந்த நிலையில், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துமாறு பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வந்த நிலையிலேயே, மாகாணசபை தேர்தலை முதலில் நடாத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். (நி)








