அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக ஆணைக்குழுவின் கால எல்லை செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை இம்மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் மோசடி குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleதிருகோணமலையில் சமூர்த்தி முத்திரை வழங்கப்பட்டது!
Next articleமுல்லைத்தீவில் விபத்து:இராணுவ வீரர் உயிரிழப்பு! (படங்கள் இணைப்பு)