ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத்துறை கூறியிருக்குமானால், அந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அது தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமமே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் தலைவரான தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத்துறை கூறியிருப்பதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதி இறந்தால், இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார்?
பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் அடுத்த ஜனாதிபதி.
அதைத்தான் எமது நாட்டின் அரசியல் சாசனம் கூறுகின்றது.
அவ்வாறு ஒன்று நடந்துவிடக்கூடாது.
ஆனால் துரதிஸ்டவசமாக அவ்வாறு ஒன்று நடக்குமானால், தற்போதய பிரதமரே ஜனாதிபதி.
உங்கள் அனைவருக்கும் தெரியும் தற்போது பிரமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுகின்றது.
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாடு.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ஊடக மாநாட்டினை நடாத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆடைகள் களன்று விழும் அளவிற்கு கருத்துக்களை கூறுகின்றார்.
பிரமரை இல்லாமல் செய்யும் அளவிற்கு பேசுகின்றார்.
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலமையகத்தில் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து, ஜனாதிபதியின் ஆடை களரும் வகையில் கருத்து கூறுகின்றார்கள்.
பிரமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பிளவு ஒட்டிக்கொள்ள முடியாத அளவிற்கு போய்விட்டது.
ஜனாதிபதி மரண தண்டணையை நிறைவேற்ற தீர்மானித்துள்ள போது, அதனை எதிர்ப்பதாக பிரதமர் கூறுகின்றார்.
நாங்கள் எதிர்த்தால் பிரச்சினை அல்ல.
ஏன் எனில் நாங்கள் எதிர்கட்சியினர்.
ஆனால் ஒரே அரசாங்கத்தில் உள்ள பிரதமர் இதனை எதிர்க்கின்றார்.
அது மட்டுமல்ல ஜனாதிபதி எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும், பிரதமர் உடனுக்கு உடன் எதிர்ப்பை வெளியிடுகின்றார்.
அதுமட்டுமல்ல பிரதமர் முன்னே அமர்ந்திருக்கும் போது ஜனாதிபதி சொல்கின்றார். எம்மை பற்றி நாமே சுயபரிசீலனை செய்து பார்க்க வேண்டிய காலம் வந்துள்ளது என்று.
நாம் விட்ட தவறுகள் தொடர்பில் பேச வேண்டிய நேரம் வந்துள்ளது.
19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நாம் பேச வேண்டிய நேரம் வந்துள்ளது.
எனவே இதுவரையில் ஜனாதிக்கும் பிரதமருக்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளுடன் ஒப்பிட்டு, ஜனாதிபதிக்கான அச்சுறுத்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத்துறை கூறியிருக்குமானால், உடனடியாக அதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் வெளியே தெரியப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியை நாம் கோருகின்றோம்.
ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தால், அதனை உதாசீனம் செய்துவிட முடியாது.
ஏன் என்றால் ஏற்கனவே ஏப்பிரல் 21 இல் புலனாய்வுத்துறை கூறியதை புறம்தள்ளியதால் ஏற்பட்ட விளைவுகளை நாம் அனைவரும் கண்டிருக்கின்றோம்.
எனவே அதனை பாடமாக எடுத்துக்கொண்டு, உங்கள் மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை வெளியே தெரியப்படுத்த வேண்டும் என நாம் கோரிக்கை விடுகின்றோம்.
என குறிப்பிட்டுள்ளார். (சி)






