அரசாங்கம் எந்த தேர்தலை நடத்தினாலும், ஜனநாயக ரீதியில் பதிலடி வழங்க தயார் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற வாராந்த கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் அதிகாரம் எனக்கு முழுமையாக காணப்படுகின்றது.
அரசியல் பழிவாங்கல்கள், அதிகார போட்டி இவ்விரண்டிற்கும் மாத்திரம் நடப்பு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்தது. இதன் விளைவே இன்று ஒட்டுமொத்த மக்களையும் பாதித்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார். (சி)