முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதியில் இருந்து வருகைதந்த சிங்கள மக்கள் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு கொழும்பு அனுராதபுரம் வெலிஓயா பகுதியிலிருந்து பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மூன்று மூன்று பேருந்துகளில் வருகைதந்த சிங்கள மக்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட பிக்குகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டனர்.
சர்சைக்குரிய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்திலும், குருகந்த ரஜமஹா விகாரையிலும் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்நிலையில் இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு சத்தியாகிரகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)