முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், மேலதிக கட்டடப் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, வவுனியா மேல் நீதிமன்றம், இன்று தடை விதித்துள்ளது.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன் முறையீடும் மீளாய்வும், இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
மேன் முறையீடு தொடர்பாக, குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பாக, கட்டளை நீதவானினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறு எனவும், அதனை இரத்துச் செயய்யக் கோரியும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கின் கோவைகள் தயாரிக்கப்படும் வரையில், குறித்த கோவைக்கான அழைப்பை செலுத்துமாறும், குறித்த வழக்கினை ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி ஒத்திவைக்குமாறும், நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. மீளாய்வு விண்ணப்பம் தொடர்பாக, இன்று ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க தோன்றியிருந்ததுடன், ஆலயம் சார்பாக சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தோன்றியிருந்தார். (சி)





