பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆரம்பமானது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று அதிகாலை 3 மணி அளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் மடை பரவி பூசைகள் இடம்பெற்றன.


அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு தற்போது நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கே வருடாந்த பொங்கல் ஆரம்பமாகியுள்ளன.

தொடர்ந்து ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் வளர்ந்து நேர்ந்து பொங்கல் மற்றும் விசேட அம்சமாக சமூக வலைத்தள நண்பர்கள் ஆலய நிர்வாகத்தேடு இணைந்து நடாத்துகின்ற 108 பானைகளில் பொங்குகின்ற பொங்கல் நிகழ்வு உள்ளிட்ட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றன.


இந்நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். (நி)


























