யாழ்ப்பாணம் – சுன்னாகம் தபாலகத்திற்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் புதிய தபாலகத்திற்கான, அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தாத்தன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
30 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக இயங்கிவந்த குறித்த தபாலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் மனோகணேசன் ஆகியோரின் இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா நிதி பங்களிப்பில் புதிய தபாலகம் அமைக்கப்படவுள்ளது. (நி)







