சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சூயஸ்ஹோ மாகாணத்தின் லியூ பன்ஷூய் நகரின் மலை கிராமத்திலேயே குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட குறித்த மண்சரிவில், 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
இது குறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில் மண்ணுக்குள் புதையுண்டிருந்த 11 பேரை உயிருடன் மீட்டனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 30 பேர் வரை காணாமல்போயுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர்.(சே)